குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துங்கள்

·         குழந்தையைக் கட்டித் தழுவி அமைதியும் செளகர்யமும் நிறைந்த இடத்தில்  குழந்தையுடன் கூடியிருந்து வாசியுங்கள்.
·         உங்கள் குழந்தை தவறாக உச்சரிக்கும் வார்த்தைகளைக் கவனத்தில் எடுத்து அவற்றை சரியான முறையில் நீங்கள் உச்சரித்து குழந்தையை அவதானித்து முயற்சி செய்து முன்னேற உதவுங்கள்.
·         வாசிப்பதை தெளிவாக மட்டுமின்றி மிகவும் ஆறுதலாகவும் செய்வதன் மூலம் அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை குழந்தை புரிந்து கொள்ள உதவ முடியும்.
·         குழந்தை உற்சாகமற்று சோர்வாக இருக்கும் நேரங்களில்  குழந்தையை அமைதிப்படுத்தி ஆற்றுப்படுத்தி மகிழ்ச்சியில் ஆழ்த்த வாசிப்பு நேரங்களைப் பயன்படுத்தலாம்.
  ஒருபோதும் அது தண்டனையாக மாறக்கூடாது. அவ்வாறானால் அது உங்கள் 
  நோக்கத்தையே கெடுத்துவிடும்